#YourWidgetID {
அமேசான் கிண்டிலில் என் நூல்கள்>>>>> காமம் பொல்லாதது[விற்பனையில் முன்னிலை வகிப்பது]>>>விந்து சுமப்பவன்>>>நான் இன்னொரு ஹிரண்யன்>>>பத்து ரூபாயில் கடவுள்>>>கானல்நீர்க் கடவுள்கள்>>>ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனித குலமும்>>>பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும்>>>சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது>>>'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள்>>>உள்ளுறை காமம்>>>அடடா இந்தப் பெண்கள்!!!>>>மசுரு விதி>>>அமேசான் கிண்டிலில் நூல் வெளியீடு...ஓர் அனுபவப் பகிர்வு>>>100% உண்மைக் கதைகள்>>>சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்>>>ஜோதிடச் சனி!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

''ரெட்டை எலைக்கு ஓட்டு! சூரியனுக்கு வேட்டு!!

அடைப்பில் இடம்பெற்றுள்ள எடக்குமடக்கான குறிப்புகள் என்னால் பதிவு செய்யப்பட்டவை! நகல் பதிவுக்கு[copy paste]க் கீழே இடம்பெற்றுள்ள கருத்தாக்கமும் அடியேனுடையதுதான்!!
[நன்றி: 'தமிழ் இந்து' நாளிதழ்[14.04.2019]
#இந்து மதத்தையும், இந்துமத[த்] தெய்வங்களையும் தரக்குறைவாக விமர்சிப்பவர்களை[தரக்குறைவா யாரெல்லாம் விமர்சிக்கிறாங்க?] மக்கள் அடையாளம் கண்டு[உங்களுக்கு அடையாளம் காட்டப் பயமா?!], இத்தேர்தலில் அவர்களுக்கு[ப்] பாடம் புகட்ட வேண்டும். இத்தேர்தல் மூலமாக இந்துக்களின் ஒற்றுமையை உலகுக்கு[க்] காட்ட வேண்டும் என்று இந்துமத[த்] துறவிகள் கேட்டுக்கொண்டனர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருவலம் சர்வமங்களாபீடம் ஸ்ரீஸ்ரீ சாந்தா சுவாமிகள் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
உலகின் அனைத்து நாடுகளிலும், பெரும்பான்மையாக வாழும் சமூகங்கள்[சமூகங்களும் மதங்களும் வேறு வேறு] பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் தொன்மையான இந்து மதம், அதன் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், திருமணச் சடங்குகள், இந்து சமய நூல்கள் ஆகியவை கேலியும், கிண்டலும் செய்யப்படுகின்றன[மனுசன் லீலை பண்ணினாத் தப்பு; கடவுள் பண்ணினாத் தப்பில்லையான்னு தி.க.தலைவர் கி. வீரமணிதான் கேள்வி எழுப்பினார்[கிண்டல் பண்ணல] வேறே யாரும் கிண்டல் பண்ணல. நீங்கபாட்டுக்கு அடிச்சிவிட்டா எப்படி?!].  இந்து சமய அருளாளர்கள்  தரக்குறைவாக விமர்சனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்து[க்] கடவுள்கள் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து சமயத்தை மட்டுமே அவர்கள் விமர்சிக்கின்றனர்[பெரியார் ஓட்டு வாங்கவா விமர்சனம் பண்ணினார்?]. எனவே, அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கும், கூட்டணிகளுக்கும் ஆதரவானவர்களோ, எதிரானவர்களோ இல்லை. இந்து மதத்துக்கு எதிராக[த்] தொடர்ந்து பேசிவரும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்[இத்தனை மடாதிபதிகள் இருக்கீங்க. இதுவரை நீங்கெல்லாம் புள்ளி வைக்கப் பாடுபட்டதாத் தெரியல. தேர்தல் நேரத்தில்தான் உறக்கத்திலிருந்து விடுபட்டீங்களா?] என்றே வலியுறுத்துகிறோம். அதற்கு இந்துக்கள் ஒற்றுமையுடன் எழுச்சி பெற வேண்டும். இந்து மதத்தைப் பாதுகாப்பவர்கள், இந்துக்களின் தெய்வமான பசுவைப் போற்றுபவர்கள்[நாய், நரி, பன்றி எல்லாம் சாத்தான்களா?], மரங்கள், நதிகள் போன்ற இயற்கை[ச்] சக்திகளைப் போற்றுபவர்கள், பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க வேண்டும். பிற மதங்களின் தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை உயர்வாகப் பேசுவதும்[பட்டியல் போடுங்கய்யா], இந்து தெய்வங்கள், இந்துமதச் சடங்கு, சம்பிரதாயங்களை மட்டும் அவமதிப்பதுமான இந்து விரோத சக்திகளை[டன் கணக்கில் மூடநம்பிக்கைகளை வளர்த்து வெச்சிருக்கீங்களே, அதுகளை முதலில் ஒழிங்க. அப்புறம் இந்து மதத்தை யாரும் அவமதிக்க மாட்டாங்க] இந்துக்கள் ஒருமித்த கருத்தோடு எதிர்க்க வேண்டும். வெறுமனே அரசியல் லாபத்துக்காக[மத்தவங்க கோயிலுக்குப் போறது நஷ்டப்படுறதுக்கா?] மறைமுகமாக[க்] கோயிலுக்கு[ச்] செல்பவர்களை ஆதரிக்கக் கூடாது.
இந்து மதத்தையும், இந்துமத[த்] தெய்வங்களையும் விமர்சிப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு, இத்தேர்தலில் அவர்களுக்கு[ப்] பாடம் புகட்ட வேண்டும். இந்த[த்] தேர்தல் மூலமாக இந்துக்களின் ஒற்றுமையை உலகுக்கு நாம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்#
ஆன்மிகப் பெரியோர்களே, 
நீங்கெல்லாம் நல்ல இருக்கணும். இனிமேலும் இப்படியெல்லாம் தலைக்கு மேலே அண்டசராசரமே கிறுகிறுன்னு சுத்துற அளவுக்குச் சுத்தி வளைச்சி அறிக்கை விடாதீங்க. நீங்க சொல்ல நினைக்கிறதை மிகச் சில வார்த்தைகளில் 'பளிச்'னு கீழ்க்காணும் வகையில் சொல்லிடுங்க.....
''தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீர்!''
===========================================================================================