#YourWidgetID {
எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வது; மூடநம்பிக்கைகளைச் சாடுவது; தாய்மொழியைப் போற்றுவது; சிந்திக்கும் திறனை வளர்ப்பது; சிறுகதைகள் படைப்பது என்றிவையே நான் பதிவுகள் எழுதுதற்கான காரணங்களாகும். வாசிப்போர்க்கு இவை ஓரளவேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

திங்கள், 10 ஜூன், 2019

'சிங்'குகளா, சிங்கங்களா?!?!

#மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்திருக்கும்வரையில் கோடிக்கணக்கில் செலவுசெய்து நிறைவேற்றப்படும் திட்டங்கள் பலனளிக்கப் போவதில்லை. திட்டங்கள் டெல்லியிலே தீட்டப்படுவது நிறுத்தப்பட்டு, மாநிலங்களில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். டெல்லி அரசு, ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் தொடர்பு ஏற்படுத்துகின்ற வகையில் இயங்க வேண்டுமே தவிர, திட்டங்களைப் போடுவதற்கும் நிதியைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதிகாரங்கள் இருக்கக்கூடாது; மாநிலங்களுக்குத் திட்டங்களைத் தீட்ட அனுமதி கொடுத்தால்தான் பலன் தரத்தக்க வகையில் திட்டங்கள் அமையும்" என அண்ணா சொன்னதையடுத்தே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுயாட்சி கோரிக்கைகள் பரவத் தொடங்கின.  மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் எல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. ஜோதிபாசு, என்.டி.ராமராவ், ராமகிருஷ்ண ஹெக்டே எனப் பல முதல்வர்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.....

.....தமிழக முதல்வரான கருணாநிதியும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தியே வந்தார். ''உரிமைக்குக் குரல் கொடுப்போம்... உறவுக்குக் கை கொடுப்போம்'' எனக் கருணாநிதி சொன்னது அதைத்தான் உணர்த்தியது. சுதந்திர தினவிழாவன்று தலைமை செயலகத்தில் ஆளுநர் தான் கொடியேற்றுவார் என்பதை மாற்றி, முதல்வர் கொடியேற்ற அனுமதி பெற்றுத்தந்தவர் கருணாநிதி தான். தொடர்ந்து எம்.ஜி.ஆரும் அண்ணா ஏற்றிய சுயாட்சி தீபத்தை அணையாமல் பார்த்துக்கொண்டார். 

பெரியாரின் இயக்கத்தில் இல்லாத, அண்ணாவோடு பணியாற்றிடாத ஜெயலலிதாகூட மாநில சுயாட்சித் தத்துவத்தில் திடமாகவே இருந்தார். யாருக்கும் அடங்கிப்போகாமல், மாநிலத் தேவைகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படக் கூடியவராக இயங்கினார்.....

.....இப்படித் தனித்துவமாக இருந்த தமிழகம், கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் உரிமை, மொழிப் பிரச்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பு, பண்பாடுகளுக்கு எதிரான செயல்பாடு என அண்மைக்காலங்களில் மிகவும் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் 'நீட்' இதற்கு மிகச்சரியான உதாரணமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பக் கல்வித்திட்டம் என்பதுதான் தமிழகத்தின் கொள்கையாகவே இருந்துவந்தது. ஆனால், மாநிலத்தின் அனுமதியே இல்லாமல் 'நீட்'டைத் திணிப்பது என்பது மாநில உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. நீதி நிர்வாக அதிகாரங்கள் மாநிலத்துக்கு வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுசேர்க்க வேண்டும்." இவை எல்லாம் அண்மையில் நடந்த விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இவை எல்லாம் இன்று புதிதாகச் சொல்லப்பட்டவை அல்ல... அண்ணா காலத்திலேயே தீவிரமாகப் பேசப்பட்டவை..... 

.....மத்திய அரசு வரம்பு மீறும்போதும், மாநில உரிமைகள் மறுக்கப்படும்போதும்தான் மாநில சுயாட்சிக்கொள்கை வலுவாக முன்னிறுத்தப்படுகிறது. 1960-களில் இதுபோன்ற சூழலின்போதுதான் மாநில சுயாட்சிக் கோரிக்கை முன்மொழியப்பட்டது. அதுதான் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடவைத்தது; தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி கொண்டு வரவேண்டும் என்ற குரலை எழுப்பியது. இப்போது 'ஒரே நாடு; ஒரே அரசு' என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுவதுதான், மாநில சுயாட்சிக்கொள்கை குறித்து பேசப்படுவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. 

மாநில சுயாட்சிக்கு முதல்முறையாகக் குரல்கொடுத்தது தமிழகம்தான்#[நன்றி: விகடன் https://www.vikatan.com/news/coverstory/103115-50-years-of-states-autonomy-demand-why-is-it-now-necessary.html ]

தொடர்ந்து குரல் கொடுத்தும் பயன் ஏதும் விளைந்ததாகத் தெரியவில்லை. செயலில் இறங்க வேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிற நிலையில், பஞ்சாப் அரசு  துணிச்சலான ஒரு முடிவை அறிவித்திருக்கிறது. சுயாட்சியை விரும்புகிற மற்ற மாநில அரசுகளும் இம்மாதிரியான அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுவது அவசியம். மிக மிக அவசியம்.

08.06.2019இல் நாளிதழொன்றில் வெளியான பஞ்சாப் அரசின் அறிவிப்பு கீழே.....