#YourWidgetID {
எனது படம்
கல்லூரிப் பேராசிரியனாக இருந்தபோது எழுதிய நூல்கள் நான்கு[04]. அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு. ஆய்வு நூல்கள்[தமிழில் ஒரு பக்கக் கதைகள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்] இரண்டு. ஓய்வுக்குப் பின்னர் எழுதிய நூல்கள்[வாழ்வியல், தத்துவம்] பதினெட்டு[19]. அவற்றுள் 'பசி.ப.பரமசிவம்' என்னும் என் வாழ்க்கைக் குறிப்பு நூலும் அடங்கும். என் ஆய்வுக் கட்டுரைக்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'முனைவர்' பட்டம் பெற்ற ஆண்டு 1990. ஓரளவுக்கேனும் பயன் நல்கும் நூல்களைப் படைத்ததில் உண்டான மனநிறைவுடன் எஞ்சியிருக்கும் வாழ்நாளை இத்தளத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதுவதன் மூலம் கழித்துக்கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சுவரை எழுதுவதற்கான ஆற்றலை இழக்காதிருத்தல் வேண்டும் என்பது என் ஆசை...அல்ல, பேராசை!

புதன், 11 செப்டம்பர், 2019

ஆவி கடவுள் ஆன கதை!!!

தங்களைத் தாங்களே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் வழக்கம் உலகெங்கிலும் உள்ளது. அதற்கு இந்தப் பாரததேசமும் விதிவிலக்கு அல்ல.

 இருசக்கர வாகனத்தில்[பைக்] பயணம் செய்த ராஜஸ்தான்காரர் ஒருவர்[ஓம் பாணா] மரத்தில் மோதி உயிரிழக்கிறார். வாகனத்துக்குச் சேதாரம் இல்லை. 

விபத்தைப் பதிவு செய்த காவலர்கள், வாகனத்தைக் காவல்நிலையத்தில் நிறுத்தியிருந்தார்கள். காணாமல் போனது அது. தேடியபோது விபத்து நடந்த இடத்திலேயே இருந்ததாம். மீண்டும் காவல்நிலையம் கொண்டுசென்று பூட்டி வைத்தார்களாம். மறுபடியும் காணாமல் போனதாம்..... கீழேயுள்ள நகல் பதிவை வாசியுங்கள்.


மரணமடைந்த ‘ஓம் பாணா’வின் ஆவி எதற்காக இந்த அதிசயத்தை நிகழ்த்தியது? இப்படியொரு கேள்வியை எழுப்பி விடை தேடும் அறிவு அங்குள்ள ஊர் மக்களுக்கு மட்டுமல்ல, காவல்துறையினருக்கும் இல்லை என்பது பரிதாபம்.

ஆவி இருப்பது உண்மை எனினும், அது வாகனத்தைக் கடத்துவது எவ்வகையிலும்  சாத்தியம் இல்லாத நிலையில், அரசாங்கத்திடம் முறையிட்டு அது குறித்து அறியும் முயற்சியும் அவர்களுக்கு இல்லை.

சங்கிலியால் பூட்டிவைத்தும் காணாமல் போன[திட்டமிட்டு யாரோ கடத்தியிருக்கிறார்கள்] வாகனத்தை விடியவிடிய பத்துப்பேர் காவல்  காத்திருந்தால் இது நடந்திருக்குமா?

சில நேரங்களில், நடைமுறை சாத்தியம் இல்லாத அதிசய நிகழ்வைக் கண்டதாகப்[பேயைப் பார்ப்பது, ஆவியோடு பேசுவது என்றிப்படி] பொய் பரப்பிப் பிரபலமாவதற்குச் சில தனி மனிதர்கள் முயல்வதுண்டு. இங்கு ஓர் ஊரைச் சார்ந்த ஒட்டுமொத்த மனிதர்களும் ஒரு கட்டுக் கதையைப் பரப்பித் தங்களைப் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூடர்களாகவே வாழ்ந்து தொலைக்கட்டும். தங்களின் வாரிசுகளையும் அல்லவா அடிமுட்டாள்கள் ஆக்குகிறார்கள் என்பதே நம் கவலை.
=================================================================================
நம் நாளிதழ்கள், இம்மாதிரியான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதால்.....

அதிகரிப்பது பத்திரிகைகளின் விற்பனை மட்டுமல்ல, முட்டாள்களின் எண்ணிக்கையும்தான்!