நன்றி!

எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

சனி, 5 அக்டோபர், 2019

ஒரு குடம் உண்மையில் ஒரு துளி பொய்[விஷம்]!

கீழ்க்காணும் நகல் பதிவு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய தொடர் கட்டுரையிலிருந்து எடுத்தாண்டது[விகடனுக்கும் அடிகளாருக்கும் என் நன்றி].

புத்தனாக மாறிய கௌதம சித்தார்த்தன் துறவின் சிறப்புகளையும் பயன்களையும் மக்களிடையே பரப்புரை செய்துவந்த நிலையில் பொதுமக்களில் பலரும் துறவிகளாக..... இனி நகல் படிவத்தை வாசியுங்கள். 

[நகலுக்குப் பின் இந்நிகழ்வு குறித்த என் கருத்துரை இடம்பெற்றுள்ளது].


கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி வரையிலான புத்தரின் வாழ்க்கை நிகழ்வை எழுதி வைத்தவர் உண்மையான புத்த மதத்தவர் ஆவார். பின்னர் வந்த, தன்னைப் புத்த மதத்தவன் என்று சொல்லிக்கொண்ட எவனோ ஒரு மூடன் கடைசிப் பத்தியில் இடம்பெற்றுள்ள கற்பனை நிகழ்வை இணைத்திருக்கிறான்.

புத்தரின் உண்மை வரலாற்றில் இவ்வாறான பொய்க்கதைகள் இணக்கப்பட்டுள்ளமையை வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
=======================================================================