நன்றி!

எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஹரிபோல் ஹரிபோல் ஹரி ஹரிபோல்!!!

இந்துமத முன்னோடிகள் ஏராளமான கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லி[மற்ற மதத்தவரும் சொல்லியிருக்கிறார்கள். அவை எண்ணிக்கையில் குறைவு] மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்த்துவிட்டார்கள். இனியும் அம்மாதிரிக் கதைகளை நம்பிச் சீரழியக்கூடாது” என்று சொல்வதோடு, அவ்வப்போது எடுத்துக்காட்டாகச் சில கதைகளைப் பதிவு செய்து வாசிக்கத் தூண்டுவதை வழக்கமாக்கிகொண்டிருப்பவன் நான்.

என் நோக்கத்தைப் புரிந்துகொள்ள மனமின்றி, “கற்பனை என்று நீ சொல்கிற பல கதைகள் அற்புதமான ஆன்மிக நெறி வளர்க்கும் கதைகளாகும். அவற்றை நாங்கள் நம்புகிறோம். நீ நாத்திகன். எங்களுக்குப் புத்தி சொல்லும் அருகதை உனக்கு இல்லை. இனி இப்படியெல்லாம் எழுதுவதை நிறுத்து” என்று என்னை எச்சரிப்பதைப்[மின்னஞ்சல் மூலம்] பக்தகோடிகள்  சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘அவர்களின் எச்சரிக்கைகளை நான் பொருட்படுத்துவதில்லை. வழக்கப்படுத்திக்கொண்ட பணியைத் தொடர்வோம்’ என்பதே என் நிலைப்பாடு.

’பிரபுபாதா’ என்றொரு ஆன்மிக தாதா. உலகெங்கும் பல கோயில்களையும் யோகா மையங்களையும் உருவாக்கியதோடு, ‘இஸ்கான்’ என்னும் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆன்மிகப் பணி புரிந்தவராம். அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவைக் ‘கிருஷ்ண அமுதம்’ என்னும் பக்தி இதழ் வெளியிட்டிருக்கிறது.

அதன் நகல் பதிவு கீழே.

“ஹரிபோல்”[இதன் பொருளைக் கூகுளில் தேடினேன்...தேடினேன்...தேடிக்கொண்டிருக்கிறேன்!] என்று உச்சரித்துக் கரகோஷம் எழுப்பிய பக்தர்களைப் போன்றவரா நீங்கள்?

ஓரிரு நாட்களில் செய்யும் ஹரி நாம சங்கீர்த்தனத்தாலே அறுபதாயிரம் வருடம் செய்த தவத்தின்[இது சாத்தியமா?] பயனை அடைய முடியும் என்று நம்புகிறீர்களா? உண்மையாகவா?

“ஆம்” எனின் நீங்கள் வாழ்க! நீடுழி வாழ்க!!
=======================================================================